தங்கலான் - ஒரு மாதத்திற்குப் பிறகு வரும் விக்ரம் | தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை |
கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலி பிசியான நடிகையாக மாறினார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஷ் அதன் பிறகு சில படங்கள் நடித்தும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.
சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் மகேஷ் அவர் கூறுகையில்; "ஈட்டி, சுந்தரபாண்டியன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை தவற விட்டுவிட்டேன். 'அங்காடித் தெரு' படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை. அதனாலேயே இது போன்ற படங்களை தவறவிட்டு என் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது" என்று வருத்ததோடு தெரிவித்துள்ளார்.