ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் விஜய்யின் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு விஜய் தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "வெங்கட் பிரபு பிறந்தநாள் நேற்று இரவே கொண்டாடப்பட்டது. அதனால் இன்று படப்பிடிப்பு இல்லை. இந்தப் படத்தின் ஒரு புதிய அப்டேட்டை நான் தருகிறேன். நேற்று இரவு இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.