‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் கடந்த சில வருடங்களாக இரண்டறக் கலந்துவிட்டது. தமிழ் இயக்குனர்கள் தெலுங்குப் படங்களையும், தெலுங்குப் படங்களைத் தமிழ் இயக்குனர்களும் இயக்கி வருகிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ்ப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்படி விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு, அப்பட இசை வெளியீட்டில் பேசும் போது, “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா பைட் இருக்கு”, எனப் பேசியது வைரலானது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய வெங்கட்பிரபு, 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியதைப் போலவே, “ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பர்பாமன்ஸ் வேணுமா பர்பாமன்ஸ் உந்தி, பேமிலி சென்டிமென்ட் வேணுமா பேமிலி சென்டிமென்ட் உந்தி, என்ன வேணுமா எல்லாம் உந்தி, இ படத்துலோ, மூவிலோ, மாஸ் வேணுமா மாஸ் உந்தி” என தமிழையும், தெலுங்கையும் கலந்து பேசினார்.
அவரது பேச்சை நாகசைதன்யா கைதட்டி சிரித்து வரவேற்றார். வெங்கட்பிரபுவின் இந்த அரைகுறை தெலுங்கு பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.