பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

தமிழ் சினிமா உலகில் இத்தனை வயதிலும் மற்ற நடிகர்கள் நெருங்க முடியாத ஒரு உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது 'ஜெயிலர்' படத்தில் கதாநாயகனாகவும், 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வருகிறார். அடுத்து 'ஜெய் பீம்' இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ரஜினியின் இரண்டு படங்களின் அப்டேட்ஸ் வெளிவந்ததால் அவரது ரசிகர்கள் 'ஹேப்பியோ ஹேப்பி' என பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடந்த வாரம் 'ஜெயிலர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது.
அடுத்து இன்று நள்ளிரவில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்' பட கதாபாத்திர அறிமுகப் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
'ஜெயிலர், லால்சலாம்' என இரண்டு போஸ்டர்களிலும் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் இருந்தாலும் அவரது ஸ்டைலே தனி அவரது ரசிகர்கள் அதைப் பற்றி பாராட்டித் தள்ளி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.