புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பத்து தல, ருத்ரன் படங்களுக்கு பிறகு தற்போது இந்தியன்-2, டிமான்டி காலனி -2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். மேலும் நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போது காதல், கல்யாணம் போன்ற செய்திகள் தங்களது மார்க்கெட்டை பாதிக்கும் என்பதால் அது போன்ற செய்திகளில் தங்களது பெயர் அடிபட்டாலே அதற்கு உடனடியாக மறுப்பு செய்தி வெளியிடுவார்கள். ஆனால் பிரியா பவானி சங்கரோ, சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதாக வெளிப்படையாக கூறி வருகிறார். அதோடு காதலருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போதும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தனது காதலருடன் கொஞ்சி மகிழும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த வீடியோவில் அவரது காதலர் ராஜவேல் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும் இடம்பெற்றுள்ளார்கள். கூடவே பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, சாப்பிடுவது உள்ளிட்ட பல விஷயங்களையும் தொகுத்து பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.