விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், தளபதி 68 வது படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கால்ஷீட்டை பொறுத்து விரைவில் படப்பிடிப்பு தேதி முடிவு எடுக்கப்படும். தற்போது இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டதால், நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது என்று அந்த பேட்டியில் கூறி இருக்கும் வெங்கட் பிரபு, விஜய் 68 வது படத்தை இயக்குவதற்கு நான் ஒப்பந்தமான செய்தியை அறிந்ததும், முதல் நபராக எனக்கு கால் பண்ணி அஜித்குமார் வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார் வெங்கட்பிரபு.