இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சார்லி சாப்ளின் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். தொடர்ந்து விசில், பரசுராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் பா.ஜ. கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், அந்தக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் விலகினார். தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் உள்ளார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற காயத்ரி ரகுராம், ஏழுமலையானுக்காக வேண்டி மொட்டை போட்டுள்ளார். மொட்டை எடுத்த பின் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ‛‛10 ஆண்டு வேண்டுதல். திருப்பதியில் நிறைவேற்றிவிட்டேன். ஓம் நமோ நாராயணா'' என குறிப்பிட்டு, கமலின் தசாவதாரம் படத்தில் வரும் ‛‛ஓம் நமோ நாராயணா'' என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.