சினிமாவை விட்டு விலக விருப்பம்: 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி தகவல் | 'அலங்கு' படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு | தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் மிருணாள் தாகூர்! | சமந்தா நடிப்பைக் கண்டு நான் பயப்படவில்லை! - கீர்த்தி சுரேஷ் | கேம் சேஞ்சர் தனித்துவமான கதை! - இயக்குனர் ஷங்கர் | ‛கமல் 237' பட பணிகள் தீவிரம் : சிக்காகோவில் கமலை சந்தித்த அன்பறிவு | நயன்தாரா தயாரிப்பில் விஜய் சேதுபதி, ஹரி.? | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு விரைவில் துவக்கம்: மோகன்லால் கொடுத்த 'அப்டேட்' | உருவாகிறது 'தமிழ்படம் 3': உறுதிப்படுத்திய சிவா | கிரிக்கெட்டுக்கு டெண்டுல்கர், சினிமாவிற்கு ஷங்கர் : அமெரிக்காவில் ராம் சரண் புகழாரம் |
கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை.
இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான கோல்டு கேஸ் மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. மேலும் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நவரசா படத்திலும் அதிதி பாலன் நடித்திருந்தார்.
தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் சிலர் பதறிப்போய் ஏன் இந்த விபரீத விளையாட்டு என்றும் கேட்டு வருகிறார்கள்.