கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' |
தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் "கருமேகங்கள் கலைகின்றன". பாரதிராஜா, யோகி பாபு, மம்தா மோகன்தாஸ், கவுதம் மேனன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பற்றி தங்கர் பச்சான் கூறுகையில்,
‛‛ 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட 'கண்மணி' எனும் பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். அருவி படத்தின் 'அருவி' பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் இவருக்கு ஏற்படுத்தும்.
ஓரிடத்தில் கூட மிகையான நடிப்பு வெளிப்பட்டுவிட்டால் படத்தின் கருவிற்கு களங்கம் ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்விலேயே 'கண்மணி' பாத்திரத்தைப் படமாக்கினேன். என்னுடைய நம்பிக்கையை நூறு விழுக்காடு நிறைவு செய்திருக்கின்றார் அதிதி பாலன். தான் ஏற்ற பாத்திரத்திற்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகள் மிக அரிதாகவே உள்ளனர். 'தென் இந்தியாவின் நந்திதா தாஸ் இவர்' என எனது அனுபவத்தில் உணர்கிறேன்.
இப்படத்தைக் காணும் அனைவரையும் கலங்கடித்து மீளாத தாக்கத்தை உருவாக்கும் இந்த கண்மணி பாத்திரம் இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணையாக அமையும் என்பதை உறுதியிட்டுக் கூறுகிறேன்'' என்றார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.