மதராஸி - மீண்டும் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயன் | பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான் | சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் | 101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி | பிப்ரவரி 21ல் 5 படங்கள் ரிலீஸ் | தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சமயத்தில் குறை கூறுவதை விட்டுவிட்டு அனைவரும் உதவ வேண்டும், உச்ச நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு : ‛‛மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்''. என குறிப்பிட்டுள்ளார்.