ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
2023ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் சுமார் 50 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியான படங்களில் 'அன்னபூரணி, பார்க்கிங், நாடு' ஆகிய படங்களுக்கு ஓரளவிற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தாலும் மழை காரணமாக அந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் அதிகம் வரவில்லை.
இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக வட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டன. அதிக வசூலைத் தரும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் சார்ந்த தியேட்டர்கள் நேற்றும் கூட மூடப்பட்டன. மக்கள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வராத காரணத்தால் இன்று கூட தியேட்டர்களில் காட்சிகள் நடக்குமா என்பது தெரியவில்லை.
கடந்த வாரம் வெளியான படங்களின் வசூலில் மிக்ஜாம் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அந்தப் படங்கள் இந்த வாரத்திலும் தொடருமா என்பது இனிமேல்தான் தெரியும். நாளை மறுதினம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்' படம் மட்டுமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்குள் இயல்பு நிலை திரும்பினாலும் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் சூழ்நிலையில் மக்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. இதனால், டிசம்பர் மாத வெளியீடுகளில் சில பல மாற்றங்கள் வரலாம்.