சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஹூமா குரேஷி. தமிழில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த வலிமை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக ‛ஸெபா: அன் ஆக்சிடெண்டல் சூப்பர் ஹீரோ' என்ற நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது பேன்டஸி கலந்த நாவல். 1992 முதல் 2019 வரை நடக்கும் கதை. கொரோனா காலக்கட்டத்தில் இதை எழுத தொடங்கினேன். வெப்சீரிஸாக எடுக்க நினைத்தேன், முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இது படமாகும். நடிப்போ, எழுத்தோ என் படைப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதை அதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்'' என்றார்.




