சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழ் சினிமா ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் அதிகம் பாராட்டப்பட்ட ஒரு படம் 'அருவி'. 2017ம் ஆண்டு வெளிவந்த அப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் அதிதி பாலன்.
முதல் படத்திலேயே அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால், அவருக்குத் தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மலையாளத்தில் 'படவேட்டு, கோட் கேஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' படத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள இப்படத்தில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியானது. அதை வைத்துப் பார்க்கும் போது அவரது கதாபாத்திரம் விஜய் சேதுபதியின் முன்னாள் காதலி போலத் தெரிகிறது.
இப்படத்திற்குப் பிறகாவது தமிழில் தொடர்ந்து நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.