அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சூரரை போற்று. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த படத்திற்கான பட்டியலில் தேர்வான ஒரே இந்திய படம் இதுதான். பின்னர் கோல்டன் குளோப் விருது விழா உள்ளிட்ட பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இலவச விநியோக உரிமை என்ற முறையில் திரையரங்குகளுக்கு, படத்தை தயாரித்த 2டி நிறுவனம் கொடுக்கவுள்ளது. அதாவது படத்தை திரையிட்டு மொத்த வசூலையும் திரையரங்குகளும் திரையரங்கு அதிபர் சங்கமும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் உடன்பாடு ஏற்பட்டு இந்த வாரத்திலேயே படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஓடிடியில் தொடர்ந்து சூர்யா நடித்த, தயாரித்த படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் இழுக்க சூரரைப்போற்று உதவலாம்.