பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. 2017ல் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பிடா' படத்திற்குப் பிறகு நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள 'லவ் ஸ்டோரி' படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல் பரவியது. ஆனால், தியேட்டர்களில்தான் வெளியிடுவோம் என படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். தற்போது அதை உறுதி செய்யும் விதத்தில் செப்டம்பர் 10ம் தேதி வினாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பவன் இசையமைப்பில் வெளிவந்த 'சாரங்க தரியா' பாடல் சூப்பர் ஹிட்டாகி, யு டியுபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கிய 'பிடா' படம் போலவே இந்தப் படமும் இனிமையான காதல் கதையாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தை இயக்கப் போகிறார் சேகர் கம்முலா.