அல்லு அர்ஜுன் மீது மீண்டும் காவல்துறையில் ஒரு புகார் | குழந்தைகளுடன் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா-ஜோதிகா | விஜய் சார், உங்க முன்னாடி நாங்க குழந்தைங்கதான் - வருண் தவான் | தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் |
சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங்கில் நுழைந்து 'பாணா காத்தாடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி பிரபலமாகும் முன்பே 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் அங்கு அறிமுகமாகி பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தன்னுடன் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து அவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமும், கடற்கரை நகரமுமான கோவாவில் பெரிய ரிசார்ட்டில் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' ஆக நடந்தது. அதன் பின் அளித்த பேட்டியில் கோவாவில் வசிக்க வேண்டும் என்பது தனது ஆசை என சமந்தா கூறியிருந்தார்.
அதற்காக கோவாவில் ஒரு இடத்தை வாங்க வேண்டுமென அவரும், கணவர் நாக சைதன்யாவும் முயற்சித்தார்கள். தற்போது அங்கு கடற்கரையை ஒட்டி ஒரு இடத்தை வாங்கிவிட்டார்களாம். அங்கு பார்ம் ஹவுஸ் கட்டுவதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்.
தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சமந்தா, கோவாவிற்கு தன் இருப்பிடத்தை மாற்றலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.