விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் சின்னத்திரையிலும், ஓடிடியிலும் வெளியாவதாக வந்த தகவலை தொடர்ந்து மேலும் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலை முடிந்திருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு விட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தில் டாப்ஸி நடித்திருப்பதால் படத்தை இந்தியில் வெளியிடவும் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.