சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் |
புலிக்குத்தி பாண்டி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் டாணாக்காரன். இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய தமிழ் இயக்கி உள்ளார்.
விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு ஏராளமான படங்களில் நடித்து விட்டார். ஒரு சில படங்கள் திருப்தியை கொடுத்தது. ஆனால் பெரும்பாலான படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் விக்ரம் பிரபு டாணாக்காரன் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்தார். கடும் வெயிலில் திறந்தவெளி மைதானத்தில் பல நாட்கள் வெறும் காலுடன் நடித்திருக்கிறார். 7 கிலோ வரை எடையை குறைத்தார்.
இது போலீஸ் கதைதான். அதாவது பயிற்சி போலீசின் கதை. அரசு கல்லூரிகளில் இருப்பது போன்றே போலீஸ் பயிற்சியிலும் ராக்கிங், ஜாதி மோதல், அதிகாரிகளின் அதிகாரபோக்கு என பல விஷயங்கள் இருக்கிறது. அதுபற்றி பேசுகிறது படம். அதிகார திமிர் பிடித்த லாலுக்கும், போலீசில் சேர்ந்து குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்ற துடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இடையிலான மோதல்தான் கதை.
இந்தப் படம் விக்ரம் பிரபுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.