'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
டெம்பிள் மங்கி என்ற யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் விஜய் வரதராஜ். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பல்லு படாம பார்த்துக்கணும் என்ற படத்தை இயக்கினார். ஜோம்பி வகை காமெடி திரைப்படமான இது இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் விஜய் வரதராஜ் இயக்கும் வெப் சீரிசுக்கு குத்துக்கு பத்து என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இது அடல்ட் கண்டன்ட் தொடர் என்று தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள விஜய் வரதராஜ் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது. அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன் தொடரின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் என்றார்.
இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர். 8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.