இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி |

நெட்பிளிக்சில் வெளிவரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள படம் இன்மை. இதில் சித்தார்த், பார்வதி நடித்துள்ளனர். ரவீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது : மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா எனக்கு இன்மை வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், ஏதும் இல்லாதது என்பதாகும்.
இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். கொரோனாவால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பார்வதி திருவோத்துவுடன் இணைந்து நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். என்றார்.




