
ஆபரேஷன் செய்த அர்ச்சனா எப்படி உள்ளார்
இது தொடர்பாக அர்ச்சனா கூறுகையில், அர்ச்சனா எப்படி இருக்காங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அர்ச்சனா ஒரு தொகுப்பாளினி தான் ஆனால் அவளுக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி. என்னை குணப்படுத்திய மருத்துவமனைக்கு நன்றி. கொரோனா பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனால் 24 மணி நேரத்தில் பல பரிசோதனைகள் செய்து மூளையில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தார்கள்.
வாழ்க்கையில் நாளை என்பதில்லை. இன்றைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நான் உணர்ந்தது. யாரையும் வெறுக்காதீர்கள், எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. அதனால் தனது தூதர்களாக டாக்டர்களையும், செவிலி தாய்களையும் அவர் படைத்துள்ளார். இது இறைவன் எனக்கு கொடுத்த மறுஜென்மம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!