கிரிஷ் 4ம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா? | மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? |
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது. ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ரஹ்மானை அணுகியதாகவும், அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.