'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'நெற்றிக்கண்' என்ற படத்தைத் தயாரித்தனர்.
இப்படம் 2011ல் வெளிவந்த 'பிளைன்ட்' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டார்கள். படத்தில் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார். டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் ஆண்டு துவக்கத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதன்பின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி வந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது.
அதை உறுதிபடுத்தி படத் தயாரிப்பாளர் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் நேரடியாக வெளியாகியது. அதன்பின் நயன்தாராவின் அடுத்த வெளியீடான 'நெற்றிக்கண்' படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.