காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்ற திறமையான கதாநாயகன் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் தான் கதாநாயகனாக உயர்ந்தார் விஜய் சேதுபதி.
அந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். அதன்பின் சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படத்திற்கும் இசையமைத்தார். அதற்கடுத்து அந்தக் கூட்டணி பிரிந்தது.
சீனு ராமசாமி அதற்குப் பிறகு இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து 'தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன்' என யுவனுடன்தான் பயணித்தார் சீனு. 'மாமனிதன்' படத்திற்கு அப்பா இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கிறார் யுவன்.
இப்போது, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு மீண்டும் என்.ஆர்.ரகுநந்தனை இசையமைக்க வைக்கிறார். நான்கு பட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர்.
'மாமனிதன்' படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் யுவனுக்கும், சீனுவுக்கும் அந்தப் படத்தில் பிரச்சினை என கிசுகிசுக்கிறது கோலிவுட். அதன் காரணமாகத்தான் மீண்டும் தன்னால் அறிமுகமான ரகுநந்தனை கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.