'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கில் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் 'சாகுந்தலம்'. குணசேகர் இயக்கி வரும் இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். காளிதாஸ் எழுதிய 'சாகுந்தலா'வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. துஷ்யந்த் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அனுசுயா கதாபாத்திரத்தில், 'அருவி' படத்தில் நடித்த அதிதி பாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தில் கூடுதலாக ஒரு ஸ்டார் அட்ராக்ஷன் இணைக்கப்பட்டிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா, 'பரதா' கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று முதல் அர்ஹா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அடுத்த பத்து நாட்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.
இதன் மூலம் அல்லு குடும்பத்தில் நான்காவது தலைமுறையிலும் நடிக்க வந்துவிட்டார்கள். அர்ஹா சினிமாவில் நடிக்க வந்துள்ளதற்கு தெலுங்குத் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.