குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
'அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா,' படங்களக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகம் வெளிப்படுத்துவதால் அவரது படங்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
'காலா' படம் தவிர அவரது முந்தைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். 'காலா' படத்திற்குப் பிறகு மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத்தான் ஒலிக்கும் என்பது படத்தின் டிரைலரிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்காக அந்த கால கட்டத்தை திரையில் கொண்டு வருவதற்காக பா.ரஞ்சித் உழைத்திருப்பது அதிகம் கவனிக்க வைக்கிறது.
வட சென்னையில் ஒரு காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட 'பாக்சிங்' சண்டைதான் படத்தின் மையக்கரு. இந்த பாக்சிங்கை வைத்து தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றிலிருந்து 'சார்பட்டா பரம்பரை' எந்த அளவிற்கு வித்தியாசமாக இருக்கப் போகிறது என்பதுதான் கேள்வியே.
ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன், அனுபமா, சஞ்சனா நடராஜன் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரது கதாபாத்திரங்களும், அதில் அவர்களது தோற்றங்களும் வித்தியாசமாக இருக்கின்றன.
இந்தப் படம் ஓடிடியில் வெளியாவது ஒரு குறைதான் என்றாலும் அதையும் மீறி படத்தை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.