சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'குட்லக் சகி'. தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்துள்ளனர். டீசரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே வெளியிட்டனர். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டீசராகவும் இருந்தது.
இப்படம் கடந்த வருடமே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றார்கள். ஆனால், அதிலும் வெளியிடவில்லை, தியேட்டர்களிலும் வெளியிடவில்லை. கடந்த சில தினங்களாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளார்கள்.
படத்தைத் தியேட்டர்களில்தான் வெளியிட உள்ளதாகவும், அப்படி ஓடிடியில் வெளியிடலாம் என திட்டமிட்டால் அது பற்றிய அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார்கள். தற்போது வெளிவரும் செய்திகள் எதிலும் உண்மையில்லை, விரைவில் அப்டேட்டுடன் வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'பெண்குயின்' தமிழ்ப் படமும், 'மிஸ் இந்தியா' தெலுங்குப் படமும் ஓடிடி தளங்களில்தான் வெளியாகின.