வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன. தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஜுலை 1 முதல் தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத அனுமதியும், ஆந்திராவில் 50 சதவீத அனுமதியும் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் பல பிரம்மாண்டமான படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை வெளியிட முடியாமல் கடந்த சில வாரங்களாகவே தத்தளித்து வருகிறார்கள். 50 சதவீத இருக்கை என்றால் கூட தங்களது படங்களை வெளியிட்டு வந்தவரை லாபம் பார்த்துவிட வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்தால்தான் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டு ஓரளவிற்காவது வசூல் பார்க்க முடியும். இந்த மாநிலங்களில் எப்போது தியேட்டர்களைத் திறப்பார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரலாம்.