தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழ் சினிமாவை இந்திய சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்ததில் முக்கியமான இயக்குனர் மணிரத்னம். இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டு கொண்டிருக்கிறார்கள்.
சினிமா என்பது காட்சி ஊடகம்தான். ஆனால், அது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிக வசனங்களுடன் கூடிய ஒரு நாடகமாக்கம் போல்தான் நீண்ட காலமாக இருந்தது. அதைத் தனது படங்களின் மூலம் உடைத்தெறிந்தவர் மணிரத்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒளிப்பதிவு, லைட்டிங், பாடல்களின் படமாக்கம் என சினிமாவை காட்சி ஊடகமாக ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். “நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி” என அவருடைய சில படங்கள் இன்றும் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் மறக்க முடியாத படங்கள்.
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதேப்போன்று மணிரத்னத்திற்கு என்று ஒரு ஸ்டைல் உள்ளது. காதல் என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி அதை எப்போதும் தன் பாணியில் இயக்குவது தான், மற்ற இயக்குனர்களிடமிருந்து அவரை தனியாக வேறுப்படுத்தி காட்டுகிறது. 80களில் தொடங்கி இப்போது வரை உள்ள ரசிகர்களையும் மகிழ்விக்கிறார் என்றால் அது அவரின் சிறப்பு என்றே சொல்லலாம்.
இப்போது அவரது இயக்கத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படமாகி வருகிறது. கொரோனா காலம் என்பதால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இருந்தாலும், மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மாறுபட்ட படைப்பாக தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் என்பதை அவருடைய ரசிகர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னத்திற்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.




