‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் படங்களைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் தங்கள் முதலீடு முடங்கிப் போயுள்ள வருத்தத்தில் இருக்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகலாம் என்ற சூழல் தற்போது இருக்கிறது. அப்படியே திறக்கப்பட்டாலும் மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம்தான். தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு கொரோனா தொற்று பயம் குறைந்த பிறகுதான் தியேட்டர்களுக்கு மக்கள் பழையபடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்றால் தியேட்டர்கள் மூடப்பட்ட பின் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் மே மாதக் கடைசியில் ஓடிடியில் வெளியானது. அதன்பிறகே ஓடிடியில் நேரடி வெளியீடு என்பது பரபரப்பாகவும், சர்ச்சையாகவும் ஆனது. அதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் முடிய மேலும் 20 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.
இந்த ஆண்டில் கொரோனாவுக்கு முன்பு ஒரு சில படங்கள்தான் ஓடிடி தளங்களில் வெளியாகின. அவற்றில் ஓரிரு படங்களுக்குத்தான் வரவேற்பு கிடைத்தது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ஓடிடியில் படங்கள் வரிசைகட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் மட்டும்தான் ஒரே ஒரு படம் வெளியானது.
பல படங்களுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சில பல சிக்கல்களால் அவற்றிற்கான முடிவு எடுக்கப்படுவதில் கால தாமதம் ஆகிறது. நாம் விசாரித்தவரையில் கீழ்க்காணும் படங்களில் சில படங்களுக்கான பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளது. சில இழுபறியில் உள்ளன, சில பேச்சுவார்த்தையுடன் நின்று போகலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரையில் இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தப் பட்டியல் கூடலாம், குறையலாம்.
வாழ்
கடைசி விவசாயி
விக்டிம்
ராக்கி
லாபம்
நெற்றிக்கண்
டாக்டர்
துக்ளக் தர்பார்
மாமனிதன்
யாவதும் ஊரே யாவரும் கேளிர்
எப்ஐஆர்
நரகாசூரன்
பார்டர்
பிரண்ட்ஷிப்
முருங்கக்காய் சிப்ஸ்
ராங்கி
பன்னிக்குட்டி
ஐங்கரன்
மஹா