விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதனை தடுக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என்று இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனபோதிலும், சிலருக்கு தடுப்பூசி மீதான அச்சம் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.