துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரைப்பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், நான் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதைப்பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இப்போதுவரை யோசிக்கவே இல்லை. அதோடு எனது திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனது கேரியரில் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை நோக்கித்தான் எனது எண்ணமும், சிந்தனையும் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.