100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
கொரோனா இரண்டாவது அலையில் பிரபல நடிகர்களும், சின்ன இணை, துணை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகினர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛மே மாதம் 31-ந்தேதி வரை சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். மேலும், வருகிற 31ந்தேதி அன்று ஒரு மீட்டிங் நடத்தி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்துவதா? இல்லை தள்ளி வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, இனிமேல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போடாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை பெப்சிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.