''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் அவர்களால் முடிந்த சில உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். நேற்று புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசும் கொரோனா தடுப்புக்கான விஷயங்களை உடனடியாக முன்னெடுத்துள்ளது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர பிற முக்கிய மாநகரங்களிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் கொரோனா தடுப்பு பற்றிய சில அறிவிப்புகளுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா உணவகம் திறப்பு ஆகியவற்றை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அரசுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கோவிட்டை எதிர்ப்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் தமிழக மக்கள் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு அரசால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நாமும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.