Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தோஷமா போய்ட்டு வாங்க : தாத்தா குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

08 மே, 2021 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Priya-bhavani-shankar-heart-felt-message-about-her-Grand-father

தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் முக்கியமானவர். அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நியைில் இவரது தாத்தா இறந்துவிட்டார். இதுப்பற்றி சமூகவலைளத்தில் அவர் பதிவிட்ட உருக்கமான பதிவு...

தாத்தா! ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி, 10 பேரப் பசங்கள்ல, 8 பேர டாக்டராக்கி, அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து, தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

நான் தாத்தாவோட செல்லமெல்லாம் இல்ல. வயதானவர் இறந்துவிட்டார் என்று கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே 'என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது' என்கிற ரகம் நாம. 10வது வரை விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத இடம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா அவ்வளவு ஒழுக்கம். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியைஇழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த கதவு வச்ச டிவி தான். பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த நிகழ்ச்சிகள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மருத்துவக் கல்லூரி போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார்.

எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா தன்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு தன்னோட அம்மாக்கு வாங்கின தோடு் இது. இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார். இது விலை மதிப்பு அற்றது. அந்த முதியவரின் மதிப்பு தெரிந்தது. உங்க அம்மாவோட தோடையும், உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா உடன் இதய பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அருண் பாண்டியன்கொரோனா உடன் இதய பாதிப்பிலிருந்து ... கொரோனா தடுப்பு : அரசுக்கு குஷ்பு ஆதரவு கொரோனா தடுப்பு : அரசுக்கு குஷ்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Dummy - Chennai,இந்தியா
13 மே, 2021 - 03:25 Report Abuse
Dummy நல்ல தொகுப்பு ...
Rate this:
chandrasekaran - Tambaram,இந்தியா
12 மே, 2021 - 10:37 Report Abuse
chandrasekaran அருமையான தமிழ் நடை , வாழ்த்துக்கள்
Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
09 மே, 2021 - 07:22 Report Abuse
raja great man
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in