'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடித்த பைரவா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்தார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது நவரசா வெப் சீரிசில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மு அபிராமிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்கள் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று பாசிடடிவ் என்று வந்தள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.