தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படம், கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் அதில் அவரது அரசியல் எதிரியான கருணாநிதியின் கதாபாத்திரமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய தகவல்களை கவனமாக படத்தின் டிரைலரில் தவிர்த்திருந்தார்கள்.
ஜெயலலிதா தீவிர அரசியலில் இறங்கிய மூன்று வருடங்களில் எம்ஜிஆர் மறைந்தார். 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை மட்டும் இடம் பெற்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசியல் வாழ்க்கையும் சரி பாதியாவது இடம் பெற்றிருந்தால் அதில் கருணாநிதி கதாபாத்திரம் முழுமையாக இடம் பெற்ற ஆக வேண்டும்.
படத்தில் கருணாநிதியை எப்படி சித்தரித்திருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்த்த படக்குழுவினருக்கு மட்டும்தான் தெரியும். தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமையப் போகிறது. இப்படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகியிருந்தால் எந்த சிக்கலையும் சந்தித்திருக்காது. ஆனால், தேர்தலுக்கு பின்பு வெளியாக வேண்டிய சூழ்நிலையைல் படம் தள்ளப்பட்டுவிட்டது.
எனவே, படத்தைப் பார்க்க வேண்டும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. சிக்கலான காட்சிகள் படத்தில் ஏதாவது இருந்தால் அதை நீக்கவும் சொல்லலாம். இந்த விவகாரம் பட வெளியீட்டிற்கு முன்பாக விஸ்வரூபமெடுக்கலாம் என்பதை மட்டும் இப்போதே யூகிக்கலாம்.