Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வராக போகும் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து

03 மே, 2021 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Celebrities-wishes-to-DMK-Chief-MK-Stalin

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். அவருக்கும், அவர் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சிக்கும் திரைப்பட நட்சதிரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:

ரஜினி: நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

கமல்: பெரும் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மனப்பூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துக்கள்.

விஷால்:
அற்புதமான வெற்றியை பெற்றிருக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள். என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும், வாழ்த்துக்கள். நமது புதிய முதலமைச்சர் முகஸ்டாலினுக்கு நல்வரவு, அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும், அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான்: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சித்தார்த்: ஜெயலலிதாவுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், நிறைய கேள்விகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்திருக்கிறோம்.

ஜெயம் ரவி: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த கடினமான காலகட்டத்தில் உங்கள் ஆட்சியை அதிக எதிர்பார்ப்புகளோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.

விஷ்ணு விஷால்: முக ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகம் மக்களுக்கான, முற்போக்குக் கொள்கைகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம். உங்களது அட்டகாசமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் . உங்கள் தலைமையில் தமிழகம் செழிக்கும், சரியான திசையில் முன்னேறும் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.

சிபிராஜ்: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலினை கொண்டாட வேண்டிய, வரவேற்க வேண்டிய நேரம் இது. மனமார்ந்த வாழ்த்துக்கள் உதயநிதி, புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள். உரித்தான வெற்றி.

பிரகாஷ்ராஜ்: உயரிய வெற்றி. வாழ்த்துக்கள் முக ஸ்டாலின். மாற்றத்துக்கான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர். மாற்றத்தைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

விக்ரம் பிரபு: முக ஸ்டாலினுக்கும் , சகோதரர் உதயநிதிக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நிர்வாகத்தில் சிறந்த ஆண்டுகள் வரும் என்று விரும்புகிறேன்.


சூரி நேரில் வாழ்த்து
சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஆகியோருக்கு நடிகர் சூரி நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தங்கர்பச்சான் : தமிழக முதல்வராக தேர்வாகும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஸ்டாலின் அவர்கள் கடந்து வந்த போராட்டக் களங்களைக் காட்டிலும் முதல்வராக ஆட்சி செய்யப்போகும் இனிவரும் காலங்கள் தான் மிகுந்த சவால்கள் நிறைந்தது. வெறும் கை கால்களைக் கொண்டு ஒரு பெரும் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் நிலைதான் அவரது நிலை. மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பயிற்சியும் ஆளுமையும் அவருக்கு இருக்கின்றன. ஆளும் கட்சி எதைச்செய்தாலும் அதை எதிர்க்காமல் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பணியாற்றுங்கள். இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கார்த்தி : மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்.

லிங்குசாமி : " ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்று தான் நாடாளுவீர்கள் நீங்கள். முக.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். வெற்றி பெற்ற நண்பர் உதயநிதிக்கும் எனது வாழ்த்துக்கள்.


Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
புதிய அரசுக்கு தயாரிப்பாளர் சங்கங்கள் வாழ்த்துபுதிய அரசுக்கு தயாரிப்பாளர் ... அம்மு அபிராமிக்கு கொரோனா அம்மு அபிராமிக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
04 மே, 2021 - 15:39 Report Abuse
கல்யாணராமன் சு. ஏற்கனவே ஒரு "demand" லிஸ்ட் தயாரிச்சிருப்பாங்களே ?? தமிழ் டைட்டில் உள்ள படங்களுக்கு முழு செலவையும் அரசே ஏற்கவேண்டும் என்பது போல ........ இதிலே உதயண்ணா சினிமா மந்திரியாய்ட்டா கேக்கவே வேணாம் ...... சினிமாக்காரங்களுக்கு எல்லாம் இலவசம் .....
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
04 மே, 2021 - 14:34 Report Abuse
Dr. Suriya என்ன பன்றது இனிமே இவங்களை அடிமைபோல் நடத்துவார்கள் என்ற பயத்தினால் இந்த வாழ்த்துக்கள்...சூடு பட்ட பூனைக்கு தானே அதன் வலி தெரியும்...
Rate this:
Bala - chennai,இந்தியா
04 மே, 2021 - 13:44 Report Abuse
Bala இனி நிறைய கலைமாமணி விருதுகள் இளம் நடிகைகளுக்கு வழங்கப்படும். ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படலாம். அவர்களுக்கு நிறைய பத்திரிக்கை விருதுகளும் வழங்கப்படலாம். திரைத்துறையினர் வருடத்திற்கு ஒருமுறையாவது பாராட்டு விழா நடத்துவார்கள். இதுபோல் நிறய எதிர்பார்க்கிறோம்
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
04 மே, 2021 - 10:34 Report Abuse
vbs manian நன்கு ஞாபகம் உள்ளது. தந்தையார் அரசு வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நாள் முழுதும் சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சியில் பொழுதை கழித்தார்.
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
04 மே, 2021 - 09:56 Report Abuse
ngopalsami சினிமாக்காரங்க வாழ்த்துகளை ஒருபோதும் கணக்கில் கொள்ளக்கூடாது. சமயத்திற்கு ஏற்றாற்போல் எப்படியும் சாய்வார்கள்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in