'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. புதிய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: முன்னாள் முதல் கருணாதிநி தலைமையிலான அரசு திரைப்படத்துறைக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது. அதேபோன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு தமிழ் திரையுலகின் இன்றைய நிலையை தாயுள்ளத்தோடு பரிசீலித்து சினிமாவை வாழ வைப்பார் என்ற நம்பிகை இருக்கிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்.
தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம்: தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் தலைமையில் அமைய உள்ள அரசு முடங்கிக் கிடக்கும் திரைப்படத்துறையினருக்கு தங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்கள் மூலம் எங்களுக்கும் நல்வாழ்வு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தயாரிப்பாளர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.