நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை இயக்குனர், நாயகன் ஆகியோரது எதிர்ப்புகளையும் மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர்.
தனுஷ் நடித்துள்ள மற்றொரு படமான 'கர்ணன்' படம் தான் ஏப்ரல் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'ஜகமே தந்திரம்' படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதை வெளியிட உள்ள ஓடிடி நிறுவனம் அறிவிக்கவில்லை. இருந்தாலும் 'கர்ணன்' படத்துடன் போட்டியாக வெளியிடவும் வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இரண்டு படங்களும் அடுத்தடுத்தும் வெளியாகலாம்.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வருகிறது. அன்றைய தினம் சில முன்னணி ஓடிடி தளங்கள் புதிய படங்களை நேரடியாக அவர்களது ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளார்கள். அதனால் 'ஜகமே தந்திரம்' படத்தையும் அன்றைய தினத்தில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படி புதிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியானால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது மேலும் குறையும் என தியேட்டர்காரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.