இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அடுத்ததாக சல்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“, “இவன் தான் உத்தமன்“, “ராஜபீமா“ என பிஸியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் யாஷிகாவும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை பதிவிடுவது அவரது ஸ்டைல். இதனாலேயே அவருக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் துபாய் விலங்கு நல பூங்கா ஒன்றில் தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில், அங்கிருக்கும் விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் யாஷியா, ஒட்டகம் ஒன்றிற்கு சிறு துண்டு இலையை தனது வாயில் வைத்துக் கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காட்சி காதலர்களின் ரொமான்ஸ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கூடவே ஒட்டகத்திற்கு இலையைக் கையில் தரக் கூடாதா என திட்டவும் செய்துள்ளனர்.