ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள யாஷிகா தொடர்ந்து பேய் படங்கள், திரில்லர் படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார். டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்குகிறார். முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.
யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின்.ஆர் பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.