விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 14) காலை காலமானார். அவருக்கு வயது 61.
தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வரும் லாபம் படத்தை இயக்கி வரும் இவர், அதன் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தான் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவரது இந்த திடீர் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.ஜனநாதன் என உருவாக்கப்பட்டுள்ள ஹாஷ்டாக்கும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.
நடிகர் வெங்கட் பிரபு - எஸ்.பி.ஜனநாதனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் - உங்களின் படங்கள் என்றும் நினைவில் இருக்கும். சமூகத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
நடிகை கார்த்திகா நாயர் - ஒவ்வொரு டைரக்டரையும் எனது குருவாக நினைத்த பணியாற்றுவேன். ஜனா சாருக்கு என் மனதில் சிறப்பான இடம் பிடித்தவர். அவரது பயணத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
நடிகை குஷ்பு - மற்றொரு மேதையை நாம் இழந்து விட்டோம். இயக்குனர் ஜனநாதன் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. சமூக பிரச்னைகளில் அவரது படங்கள் என்றும் நினைபடுத்திக் கொண்டே இருக்கும்.
நடிகர் ஆர்யா - அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தமான செய்தி. எனது வாழ்க்கையில் சந்தித்த மிகவும் நல்ல மனிதர். உங்களை மிஸ் செய்கிறோம் சார். லவ் யூ ஆல்வேஸ்