ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.ஜனநாதனின் உறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 15) காலை 10 மணியளவில் மயிலாப்பூரில் நடைபெற உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு இசையமைப்பாளர் இமான், மன்சூர் அலிகான், பா.ரஞ்சித், ஆர்.பி.சவுத்ரி, அமீர், சேரன், கரு.பழனியப்பன், மனோ பாலா, நாசர், கலையரசன், ஜெயம் ரவி, மோகன் ராஜா, ரவி மரியா, சென்டிராயன், டோரா தாஸ், ஸ்ரீகாந்த் தேவா, தன்ஷிகா, காதல் சந்தியா, வசுந்தரா, அருண் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.