டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ |
படம் : சண்டக்கோழி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால்
இயக்கம் : லிங்குசாமி
தயாரிப்பு : ஜி.கே.பிலிம்ஸ்
கடந்த, 2005-ம் ஆண்டு வெற்றிப் படங்களில், சண்டக்கோழிக்கும் முக்கிய இடம் உண்டு. தியேட்டரில், 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ஆனந்தம், ரன் என, அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த, இயக்குனர் லிங்குசாமி, ஜி படத்தில் சறுக்கினார். குதிரை போல சட்டென எழுந்து, சண்டக்கோழி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
சிதம்பரத்தில் இருக்கும், தன் கல்லுாரி நண்பர் வீட்டிற்கு வரும் விஷால், உள்ளூர் தாதாவான லாலுடன் மோதுகிறார். இதைத் தொடர்ந்து, விஷாலை பழிவாங்க, அவரது ஊரான மதுரைக்கு செல்கிறார் லால். அங்கு, ஊர் பெரிய மனிதரான ராஜ்கிரணின் மகன் தான், விஷால் என, தெரிய வருகிறது. இதையடுத்து நிகழும் ஆக் ஷன் பரபரப்பு தான், படத்தின் இரண்டாம் பகுதி.
இப்படத்தில் இடம்பெற்ற, விஷால் - மீரா ஜாஸ்மின் காதல் காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது. மீராவின் குறும்புத் தனத்திற்கு, பூங்கொத்து கொடுக்கலாம். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் மற்றும் சூர்யா. அவர்கள் நடிக்க மறுத்ததால், விஷாலுக்கு, 'பம்பர் பிரைஸ்' அடித்தது. விஷாலின் சினிமா பயணத்தில், சண்டக்கோழிக்கு மிக முக்கிய இடம் உண்டு.
இப்படத்திற்கு ஜீவா, நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருந்தனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருந்தார். கன்னடத்தில், வாயுபுத்ரா என்றும்; ஒடியா மொழியில், கஞ்சா லதே என்றும், 'ரீமேக்' செய்யப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. குறிப்பாக, 'தாவணி போட்ட தீபாவளி...' பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம், 2018ல் வெளியானது. முதல் பாகத்தின் விறுவிறுப்பையும், வெற்றியையும் பெற தவறிவிட்டது.
சிலிர்த்து நின்றது சண்டக்கோழி!