துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்சேதுபதி இன்று(ஜன., 16) அவருடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான விஜய் சேதுபதி அடுத்து சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்வன் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'உப்பெனா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய கதாபாத்திரமான 'ரயனம்' போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் ஒரு பிரேமில் கூட விஜய்சேதுபதி இல்லை. அந்த சர்ச்சைக்கும் பதிலளிக்கும் விதமாக 'டிரைலரில் அவரைப் பார்க்கக் காத்திருங்கள், அது நெருப்பாக இருக்கும்” என்பதை உணர்த்த 'பயர்' எமோஜியைச் சேர்த்து பதிவிட்டுள்ளார்கள்.
'மாஸ்டர்' படத்தின் வில்லன் 'பவானி' கதாபாத்திரத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் 'ரயனம்' பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.