சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
வெளிநாடுகள் பலவற்றிலும் 'மாஸ்டர்' படத்தைத் திரையிட தியேட்டர்காரர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த கொரோனா காலத்தில் ஹாலிவுட் படங்களைக் கூட தியேட்டர்களில் வெளியிடத் தயங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததற்கு வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் தியேட்டர் நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்தன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் எமிரேட்ஸில் 'மாஸ்டர்' படம் சுமார் 50 தியேட்டர்களில் மட்டும்தான் வெளியானதாம். இருந்தாலும் கொரோனா தளர்வுகளுக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூலை 'மாஸ்டர்' படம் முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களான 'டெனட், வொன்டர் உமன்' ஆகிய படங்கள் சுமார் 200க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர் மற்றும் 8 லட்சம் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்ததாம். ஆனால், 'மாஸ்டர்' படம் 50 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி 1.4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதே போல் படம் வெளியான மேலும், பல வெளிநாடுகளில் 'மாஸ்டர்' படம் சீக்கிரத்தில் லாபத்தைக் கொடுத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.