பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து 'கூலி' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்தரிங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. ஆக., 14ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "ரசிகர்கள் நான் லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் நான் மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்யை நான் ஜே.டி., ஆக பார்க்க மிகவும் பிடிக்கும். மாஸ்டர் படத்தில் இன்னும் சொல்ல வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். அது விஜய்க்கும் தெரியும்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.