மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
இன்று 5வது நாளில் அடியெடுத்து வைக்கிறது கூலி. இதுவரை 400 கோடி அளவுக்கு வசூலித்து இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் பட வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நான்கு நாட்கள் ஆர்முடன் முன்பதிவு செய்தவர்கள் படத்தை பார்த்துவிட்டார்கள். நேற்றுடன் விடுமுறை முடிவடைந்துவிட்டதால் இன்று முதல் கூலி வசூல் எப்படி இருக்கும், இந்த வாரத்தில் எவ்வளவு வசூலிக்கும் என்பதே படக்குழுவினரின் கவலையாக உள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் கூலிக்கு எதிராக வரும் செய்திகள், கடும் விமர்சனங்கள், கிண்டல், கேலி, மீம்ஸ், கூலி வசூலை பாதித்துள்ளது. படம் குறித்து நெகட்டிவ் இமேஜை உருவாக்கி உள்ளனர். இதுவரும் நாட்களில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற தாக்குதல்கள் பெரிய படங்களுக்கு அதிகம் நடக்கிறது. கங்குவா, தங்கலான், தக் லைப், இந்தியன் 2, லியோ, ரெட்ரோ, குட் பேட் அக்லி போன்ற படங்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டன. கொஞ்சம், கிண்டல், கேலி குறைவாக இருந்து இருந்தால், இந்த படங்கள் இன்னும் பல கோடிகளை அதகிமாக வசூலித்து இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் ஆதங்கப்படுகிறார்களாம்.
ஆனால், இன்னொரு தரப்போ, ''நல்ல படங்களை யாரும் கிண்டல் செய்வதில்லை. டூரிஸ்ட் பேமிலியை கொண்டாடினார்கள். மாமன், தலைவன் தலைவி படத்தை யாரும் கடுமையாக விமர்சனம் செய்தது இல்லை. இந்த படங்களில் குறை இருப்பதால் திட்டி தீர்க்கிறார்கள். கூலி படம் வெளியாவதற்கு முன்பு, ரஜினிகாந்த் சொன்ன மாதிரி மணிக்கணக்கில் பேட்டிகொடுத்தார் இயக்குனர் லோகே ஷ் கனகராஜ். ஆனால் படத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் இல்லை.
நேரம் செலவழித்து, பணம் செலவழித்து பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளை யு-டியூப்பில், சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கிறது. கூலி விமர்சனங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் தான். அவரை விதவிதமாக திட்டி, கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அடுத்து கைதி 2வில் அவர் வெற்றி கொடுக்கும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும் என்று கூறப்படுகிறது.