‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

'அருவா சண்ட' படத்தை தயாரித்த வி.ராஜா, தற்போது தயாரிக்கும் படம் 'நெல்லை பாய்ஸ்'. கதையின் நாயகனாக அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும், வில்லனாக வேலராம மூர்த்தியும் நடிக்கிறார்கள். ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார், ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது "இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் தென் தமிழகம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் விதமாக சொல்வதோடு, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது. அக்டோபர் மாதம் படம் வெளியாகிறது" என்றார்.